மே 1 முதல் அமலுக்கு வரும் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறைமையில் புதிய மாற்றங்கள் – முழு விவரம்!
மே 1 முதல் அமலுக்கு வரும் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறைமையில் புதிய மாற்றங்கள் – முழு விவரம்!
இந்திய ரயில்வே பயணிகள் வசதிக்காகவும், முறையான டிக்கெட் முன்பதிவை உறுதி செய்யவும் பல்வேறு புதிய விதிமுறைகளை இன்று, 2025 மே 1 முதல் அமல்படுத்தியுள்ளது. புதிய விதிமுறைகள் குறித்து பயணிகள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் தேவையற்ற நஷ்டங்களை சந்திக்க நேரிடும்.
User ID ஒன்றுக்கு 2 தட்கல் (Tatkal) டிக்கெட்டுகள் மட்டுமே!
இனிமேல் ஒரு பயனர் ID மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதி உண்டு. இதன் மூலம் தட்கல் முறையை வழிமுறைப்படி பயன்படுத்துவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முன்னதாக, ஏஜெண்ட்கள் அல்லது பல ID-களை பயன்படுத்தி டிக்கெட்டுகள் முறைகேடாக வாங்கப்பட்டதாக புகார்கள் எழுந்திருந்தன.
முழு பணம் திருப்பி!
பயணதினம் வரை உறுதி ஆகாத (Confirmed ஆகாத) காத்திருப்பு (Waiting List) டிக்கெட்டுகளுக்கு பயணிக்க முடியாததால், பயணிக்காத பயணிகளுக்கு முழு பணம் திருப்பி அளிக்கப்படும். இது பயணிகள் நன்மைக்கே உரிய மாற்றமாக இருக்கிறது.
48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் – 75% பணம் திருப்பி கிடைக்கும். 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் – பணம் திருப்பம் கிடையாது.
டிக்கெட் ரத்து சேவைக்கட்டணம் (Cancellation Charges) வழக்கம்போல அமலும், இதில் எந்தவித மாற்றமும் இல்லையென்றாலும், புதிய விதிமுறைகள் அதிக நெருக்கடியான பயணத் திட்டமிடலை ஊக்குவிக்கின்றன.
தங்களின் IRCTC கணக்குகளை சரியாக பயன்படுத்தவும், ஒரே ID-யை மட்டுமே உபயோகிக்கவும். பயண திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யவும்.
தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவுக்கு நேரத்தில் முயற்சிக்கவும். பயண ரத்து தேவைப்பட்டால் 48 மணி நேரத்திற்கும் முன்பாக நடவடிக்கை எடுக்கவும்.
இந்த மாற்றங்கள் பயணிகள் நலன், டிக்கெட் முறைகேடுகளை தவிர்ப்பது மற்றும் திட்டமிடல் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த புதிய விதிகளை பின்பற்றி பயணத்தை சீராக மேற்கொள்ளலாம்.
Comments
Post a Comment