சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!
சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நகரமாக விளங்கும் சாங்காயில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் ஒரு உதாரணமாக, புதிய GOLD ATM ஒன்று அறிமுகமாகியுள்ளது. இது சாதாரண ATM போல அல்ல, தங்கத்தை நேரடியாக வங்கி பணமாக மாற்றும் திறனுடைய அசாத்திய மெஷின் உருவாக்க பட்டுள்ளது.
இந்த GOLD ATM மூலம், பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்க ஆபரணங்களை அல்லது தங்கத் துண்டுகளை மெஷினில் இடலாம். அதனைத் தொடர்ந்து மெஷின், தங்கத்தின். அளவு (Weight) தூய்மை (Purity) எல்லாவற்றையும் துல்லியமாக கணக்கிட்டு, நியாயமான அன்றைய சந்தை விலைக்கே உரிய மதிப்பை கணக்கிடும். அதன் பிறகு, தங்கத்தை 30 நிமிடங்களில் உருக்கும் திறனுடைய தொழில்நுட்பத்தின் மூலம், உடனே உருக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளன.
3 கிராம் முதல் 1 கிலோ வரை தங்கம் எடுத்துக்கொள்கிறது. 30 நிமிடங்களில் உருக்கும் மெக்கானிசம் கொண்ட வசதி உள்ளது.தங்கத்தின் தூய்மை அளவை கணக்கிடும் அதிக நவீன சோதனை முறைகளும வங்கிக் கணக்கில் நேரடி பணம் செலுத்தும் வசதியும் , அத்தகவல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனை கொண்ட வசதியுடன் துல்லியமாக உருவாக்கப்பட்டது.
இந்த GOLD ATM தொழில்நுட்பம் தங்கத்தை விற்பவர்களுக்கு வணிகர், மதிப்பீட்டாளர் அல்லது மூன்றாவது நபர் தேவை இல்லாமல் நேரடியாக தங்களது தங்கத்தை பணமாக மாற்றும் ஒரு பாதுகாப்பான மற்றும் சீர்தூக்கான வழியை வழங்குகிறது. இதன் மூலம் முடிவெடுக்கும் சுதந்திரம் மற்றும் நம்பகத்தன்மை அதிகரிக்கின்றன.
இத்தகைய ATM மெஷின்கள் எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் விரிவடையக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் இதுபோன்ற நவீன வசதிகள் அறிமுகமாகும் நாள் தொலைவில் இல்லை என நம்பலாம்.
Comments
Post a Comment