மையோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
மையோனைஸுக்கு ஓராண்டு தடை - தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் பொதுமக்கள் நலன் கருதி, முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஒரு வருடத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழ் அறிவிப்பில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006 -ன் பிரிவு 30 (2)(a) விதியின் கீழ் இந்த தடை உத்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்படக் காரணமாக இருந்த முக்கியமான கீழ் காண்போம்.
முறையற்ற முறையில் மையோனைஸ் தயாரிக்கப்படுவது, தேவையான சுகாதார நெறிமுறைகளை பின்பற்றாமல் சேமித்து வைப்பது,
பொதுமக்கள் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு, போன்ற பல்வேறுபட்ட காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8, 2025 முதல் ஓராண்டு காலத்திற்கு, தமிழகத்தின் எந்த பகுதியிலும் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன:
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் உற்பத்தி, மையோனைஸ் சேமித்தல்,
விற்பனை மற்றும் விநியோகம் போன்ற
இந்த நடவடிக்கை தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் அடிப்படையில் அமலாக்கப்படுகிறது.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் இந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அரசு சுகாதார துறை இந்த தடை அமலாக்கத்தை வலுவாக கண்காணிக்கவுள்ளது.
சுகாதாரமான வாழ்விற்கு அரசு எடுக்கும் இந்த நடவடிக்கையை நாமும் ஆதரிக்க வேண்டும்!
Sources:
தமிழ்நாடு அரசு அரசிதழ் – ஏப்ரல் 8, 2025
உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு
Comments
Post a Comment