மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக டோனி
இந்திய பிரீமியர் லீக் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய திருப்பமாக, ருத்துராஜ் கெய்க்வாட் தொடரிலிருந்து விலகுகிறார் வாருங்கள் இது பற்றி விரிவாக காண்போம்
ருத்துராஜின் விலகலுக்கான காரணம் முற்றிலும் வெளியிடப்படாதபோதிலும், இவர் ஒரு சிறிய காயத்திற்கு சிகிச்சை பெற போவதாக சென்னை அணி நிர்வாகம் கூறுகின்றது. தொடரின் மிக முக்கியமான கட்டத்தில் இந்த மாற்றம், CSK ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
2023 சீசன் முடிவில் கேப்டன் பதவியை ருத்துராஜுக்கு ஒப்படைத்த தோனி, அணியின் வளர்ச்சிக்கு அவரது கேப்டனுக்கு ஆதரவை அளித்து வந்தார். ஆனால், தற்போதைய சூழ்நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தனது அனுபவத்தால் அணியை மீண்டும் நடத்துவதற்காக கேப்டனாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் “ருத்துராஜின் விடுப்பு எதிர்பாராத ஒன்று. ஆனால் தோனி இருக்கும்போது எங்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவர் தான் இப்போது கேப்டனாக பணியாற்றப்போகிறார்,” என ப்ளெம்மிங் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம் CSK ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாகவும், இன்னொரு வகையில் கவலையாகவும் உள்ளது. தோனியின் இரண்டாவது வருகை எப்போதும் உற்சாகத்தை தரும், ஆனால் ருத்துராஜ் போன்ற இளம் வீரரின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற ஆவலும் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் தன்னை ஒரு தனி இடத்தில் நிலைநாட்டிய தோனி, மீண்டும் ஒரு முறை தனது அனுபவத்தால் அணியை வழிநடத்தவிருக்கிறார். CSK ரசிகர்களுக்கு இது மீண்டும் ஒரு "தல" கொண்டாட்டமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை
மஹேந்திர சிங் தோனிதான் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
Comments
Post a Comment