மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு திட்டம்
மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைப்பு திட்டம்
மத்திய அரசு, இந்தியாவின் சாலை கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தும் நோக்குடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் மேம்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கையாகும்.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் கடினமான நிலப்பரப்பும், எல்லை அருகில் உள்ள இடங்களும் காரணமாக, சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் அவசியம் உள்ளது. இதற்காக, 3,73,484 கோடி ரூபாய் மதிப்பில், 21,355 கி.மீ. நீளமுள்ள 784 நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்தப் பணிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI), மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் மேற்கொள்கின்றன. முக்கிய மாநிலங்களில் நடைபெறும் நெடுஞ்சாலைகளான அசாம் ₹57,696 கோடி, பீஹார் ₹90,000 கோடி ,மேற்கு வங்கம் ₹42,000 கோடி, ஜார்க்கண்டிற்கு₹53,000 கோடி,
ஒடிசாவில் ₹58,000 கோடி,
அசாமை தவிர மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கு ₹1,00,000 கோடி
2014-ல் 91,287 கி.மீ.யாக இருந்த தேசிய நெடுஞ்சாலை நீளம், தற்போது 1,46,204 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
2024-25-ல் 5,150 கி.மீ. இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இதுவரை 5,614 கி.மீ. நெடுஞ்சாலைகளை உருவாக்கியுள்ளது.
"வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிச் சாலைகளை அமெரிக்க தரத்தில் மேம்படுத்துவதே முக்கியக் குறிக்கோள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதனை உண்மையாக மாற்ற மத்திய அரசு முழு முயற்சியும் மேற்கொள்ளும்."
இந்த கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான துடிப்பூட்டும் முயற்சி என கூறலாம்.
Comments
Post a Comment