புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை ரூ.723 கோடி செலவீனமாகியுள்ளது - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை ரூ.723 கோடி செலவீனமாகியுள்ளது - அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் "புதுமைப்பெண் திட்டம்" மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.723.15 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் பேரவையில் அறிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலில் துவங்கப்பட்ட ‘புதுமைப்பெண் திட்டம்’ என்பது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, பட்டப்படிப்பு படிக்கக்கூடிய தகுதி பெற்ற மாணவிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர்ந்தால் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் கல்வியில் தொடர்ந்து முன்னேறவும், பொருளாதார ரீதியாக தங்கள் கல்வியை தாமாக முடிக்க உதவும் வகையிலும் மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், இது தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பி.கீதா ஜீவன், "இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை 6.52 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகைக்காக இதுவரை ரூ.723.15 கோடி அரசு செலவிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த திட்டத்தின் காரணமாக பல குடும்பங்களில் பெண்கள் கல்வியை நிறுத்தாமல் தொடர்ந்து கல்லூரிக்கு செல்வதற்கான சூழல் உருவாகி வருகிறது என்றும், சமூக முன்னேற்றத்திற்கும் இது உதவிகரமாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு மட்டுமே தகுதி எனவும்,அரசு/அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர வேண்டும். மாதம் ரூ.1000 நேரடியாக மாணவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 5 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை பெற முடியும்.
பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், சமூக நலனுக்காகவும் பெண்களின் எதிர்கால வளர்ச்சிக்காகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழக அரசு இது போன்ற திட்டங்களை தொடர்ந்து விரிவாக்கும் படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Comments
Post a Comment