இந்திய ரயில்களில் "அதிக சுமை கட்டணம்" என்பது என்ன? முழுமையான விளக்கம்





இந்திய ரயில்களில் "அதிக சுமை கட்டணம்" என்பது என்ன? முழுமையான விளக்கம்


இந்திய ரயில்வே என்பது உலகின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகும். தினமும் இலட்சக்கணக்கான டன்கள் சரக்குகள் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் ஒரு ரயில் வண்டியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் சுமை ஏற்றப்படும்போது, அந்த அதிகபட்ச சுமைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத்தான் "அதிக சுமை கட்டணம்" (Overloading Charges) என அழைக்கின்றனர்.


பாதுகாப்பு வழிமுறைகளை உறுதிப்படுத்த,  பாதை, ரயில் பாகங்கள் சேதமடையாமல் பாதுகாக்க, சரியான சுமை பரிசோதனையை ஊக்குவிக்க, என பல காரணங்களுக்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வண்டிக்கும் இந்திய ரயில்வே "Permissible Carrying Capacity" எனும் அதிகபட்ச சுமையை நிர்ணயித்துள்ளது. அந்த வரம்பை மீறி ஏற்றப்படும் சுமைக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.


         விரைவு ரயில்களில் அதிக சுமைக்கு 1.5 மடங்கு முதல்  கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சுமையின் அளவு, வண்டியின் வகை மற்றும் ஏற்றப்பட்ட பொருளின் வகையைப் பொறுத்து மாறும். 

       விரைவு ரயில்களில் முதல் தர குளிர்சாதன பெட்டிகளில் பயணிகள் நபர் ஒருவருக்கு 70கிலோ வரை அனுமதிக்கப்படுகின்றன.  இரண்டாம் தர குளிர்சாதன பெட்டிகளில் பயணிகள் நபர் ஒருவருக்கு 50கிலோவும்,  மூன்றடுக்கு பெட்டியில் 40 கிலோவும், படுக்கும் வசதி  பெட்டியில் 40 கிலோவும்,   இருக்கை வசதி பேட்டியில் 35 கிலோ வரையும் அனுமதிக்கப்படுகின்றன. 

 நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுத்து செல்லும் ஒவ்வொரு 10 to 15 கிலோவுக்கும்  இரண்டு மடங்கு 
அதிக சுமை கட்டணம் செலுத்த வேண்டும்.


      அதிக சுமை கட்டணம் என்பது இந்திய ரயில்வே அமைப்பில் ஒரு முக்கியமான கட்டுப்பாட்டு முறையாக இருக்கிறது. இது பாதுகாப்பு, பாரபட்சமில்லாத சேவை மற்றும் பாதை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான நடைமுறையாகும்.



Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்