குமரி ஆனந்தன் இறப்பு , தவெக தலைவர் இரங்கல்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , தமிழக பாஜக கட்சி முன்னாள் தமிழிசை அவர்களுடைய தந்தையின் இறப்பிற்கு தவெக தலைவரான நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி, நம் கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் சேர்ந்து பயணித்து மக்கள் சேவையாற்றியவர்;
மது ஒழிப்பிற்காகத் தம் வாழ்நாள் முழுவதும் போராடியவர்;
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக, ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக நேர்மையுடன் பணியாற்றியவர்.
எளிமையாக மக்களோடு மக்களாக வாழ்ந்த அய்யா திரு. குமரி அனந்தன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.இவ்வாறாக தவெக தலைவரான விஜய் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment