நீட் தேர்வு போராட்டம் -தமிழக அரசின் செயல்பாடு குறித்து துணை முதல்வர் கருத்து
தமிழ்நாடு துணை முதல்வராக உள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் போராட்டம் பின்வருமாறு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய #NEET விலக்கு சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் நிராகரித்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீட் விலக்கிற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிகிற வாய்ப்பைப் பெற்றோம்.
“நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தொடர்ந்துள்ள வழக்கைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது,
நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உட்பட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வது” என இக்கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
சமூக அநீதியின் சின்னமாக இருக்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை தமிழ்நாடு தொடர்ந்து போராடும், தமிழ்நாடு வெல்லும். வென்றே தீரும்!
இவ்வாறாக தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment