தொடர் தோல்வியை நோக்கி சிஎஸ்கே: செய்ய வேண்டியது என்ன? ரசிகர்கள் வேதனை
தொடர் தோல்வியை நோக்கி சிஎஸ்கே: செய்ய வேண்டியது என்ன? ரசிகர்கள் வேதனை
2025 ஐபிஎல் சீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் தரும் விதத்தில் ஆடி வருகிறது. இந்த ஆண்டு 6 போட்டிகளில் 5 தோல்விகள் என்ற நிலையில் CSK அணி தனது வெற்றி வாய்ப்பை இழந்துபோனது மட்டுமல்ல, பிளேஆஃப் வாய்ப்புகளும் மிகமிக குறைவாக உள்ளன.
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. எளிதாகக ெ இந்த இலக்கை கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்
இந்த தோல்விக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. ஆனால் முக்கியமானதாக இருவர் மீது ரசிகர்கள் அதிகம் புகார் கூறுகின்றனர். முதலில் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் மற்றும் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
ரவிசந்திரன் அஸ்வின் சில வருடங்களுக்கு முன் தனது யூடியூப் சேனலில், பெயரை குறிப்பிடாமல் ஒரு பயிற்சியாளர் தொடர்பாக புகார் சொன்னது அனைவரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.அவர் குறிப்பாக தனது நாட்டைச் சேர்ந்த வீரர்களை மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்து, அவர்கள் ஈடுபாடு இல்லாமல் விளையாடினாலும் தொடர்ச்சியாக வாய்ப்பு தருவது பிளமிங்கை கூறுவது போல் இருந்து.
அதற்கேற்ப இந்த சீசனில் ரச்சின் ரவீந்திரா சரியாக ஒரு ஆட்டத்தில் கூட பந்து வீசாமல், பேட்டிங்கிலும் சில ஆட்டங்களை தவிர வேறொன்றும் செய்யாமல் தொடர்ந்து களமிறங்குகிறார். ஏன் அவருக்கு இப்படியான முக்கியத்துவம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதன் பின்னணி என்னவென்றால் பிளமிங் தான் என ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
அடுத்து, ஏலத்தில் ராகுல் திருப்பாதியை வாங்கிய CSK அவரிடமிருந்து என்ன எதிர்பார்த்தது என்பது தான் பெரிய புதிர். கடந்த ஒரு வருடமாக எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை, நாட்டின் டி20 அணியில் கூட இடம் பெறவில்லை. ஆட்டத்தில் நம்பிக்கை இல்லாத தோற்றமும், தாமதமான ஆட்டமும் ரசிகர்களுக்கு அவர் மீதான வெறுப்பாக மாற்றியுள்ளது.
CSK அணியில் உத்தப்பா, ரகானே போன்றோருக்கு மறுவாழ்வு கிடைத்தது போல, ஹூடாவுக்கும் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் அவரும் அதனை பயன்படுத்தவில்லை. இன்று வரை பெரிதாக பங்களிக்காமல், பல தடவைகள் டக் அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
பிளமிங் 15 ஆண்டுகளாக CSK பயிற்சியாளராக இருந்து வருகிறார். ஆனால் இன்றைய கால டி20 சூழ்நிலையில் அவர் அணியை அப்டே செய்யத் தயங்குவதாக தெரிகிறது. அதே காரணத்தால் விலகிய கோஹ்லி, பாண்டியா, ரோகித் ஆகியோரை போல, பிளமிங்கும் புதுசாக யோசிக்கத் தயாராக இல்லையே என்ற விமர்சனங்கள் எழுகின்றன.
இளம் வீரர்களுக்கு முழு வாய்ப்பு கொடுத்து இப்போதிலிருந்தே அடுத்த சீசனுக்கான திட்டங்களை CSK அமைக்க வேண்டும். பழைய சீனியருக்கு வாய்ப்பு கொடுக்கும் பழக்கத்தை உடைத்தாக வேண்டும். புதிய பயிற்சியாளரை நியமித்து, அட்டாக் ஆட்ட முறையை பின்பற்ற வேண்டும். மற்ற அணிகள் போன்று இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். 2020-இல் ருதுராஜ் ஆரம்பத்தில் வாய்ப்பு பெற்றபோது ஹாட்ரிக் அரை சதம் அடித்தார். அதுபோல் இப்போது யாராவது இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்கினால், CSK மீண்டும் எழும் வாய்ப்பு உள்ளது.
Comments
Post a Comment