சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னிந்திய ரயில்வே நிர்வாகம்.வாருங்கள் இதை பற்றிய தகவல்களை விரிவாக காப்பகம்.

 தினமும் சென்னை சென்ட்ரல் ஸ்டேசனுக்கு பல லட்ச கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஒரு நாளைக்குள் வேலை முடித்து ஊருக்குத் திரும்புபவர்களுக்கு  பயன்படும் வகையிலான  ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது தென்னிந்திய ரயில்வே நிர்வாகம். 

ரயில் வர தாமதமான சூழ்நிலையில் யாரிடமாவது உடைமைகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவசரமாகச்  செல்லவேண்டியதில்லை. 

இரண்டாவது பிளாட்பாரம் செல்லும் வழியில்  நுழைவாயிலிலேயே இந்த வசதி உள்ளது. 

லார்ஜ், மீடியம், ஸ்மால் என மூன்று அளவுகளில் லாக்கர்கள் உள்ளன. பயனாளர்கள் உடைமைகளின் அளவுக்கேற்ப  லாக்கரை தேர்வு செய்து  கொள்ளலாம். மொத்தம் எண்பத்து நான்கு லாக்கர்கள் இருக்கின்றன. 

லாக்கரில் உள்ள க்யூஆர் குறியீடை கூகிள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்து அலைபேசி எண்ணைப் பதிவு செய்து தேவையான நேரத்திற்கேற்ப கட்டணத் தொகையை செலுத்த வேண்டும்.

 பேமெண்ட் உறுதி செய்யப்பட்டு அலைபேசிக்கு குறுஞ்செய்தியில் ஒடிபி வரும். அந்த ஒடிபி எண்களை ஸ்மார்ட் லாக்கர் செயலியில் உள்ளீடு செய்தால் லாக்கர் திறந்து கொள்ளும்.

 உடைமைகளை உள்ளே வைத்துவிட்டு கதவை மூடினால் தானாக லாக் செய்து  கொள்ளும். 

லாக்கரைத் திறப்பதற்கும் அதே வழிமுறைதான். ஸ்கேன் செய்து ஒடிபி உள்ளீடு செய்தால் லாக்கர் திறந்து கொள்ளும்.

 உங்களுக்குப் பதிலாக  உங்கள் பொருள்களை வேறு யாரையாவது கூட எடுத்துவர அனுப்பலாம்.  உங்கள் பொருள்களை எடுக்கச் செல்லும் நபர் லாக்கர் க்யூஆர் ஸ்கேன் செய்தல் ஒடிபி உங்களுக்கு வரும். அதை அவர் உள்ளீடு செய்தால் லாக்கர் திறந்து கொள்ளும்.

தேவைப்படுபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பெற முடியும். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை  பெற்று வருகிறது..

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்