கருந்துளசி பயன்கள்...
கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது.
கருந்துளசி (Black Tulsi) பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகைச் செடி. இதன் முக்கியமான பயன்களைப் பார்ப்போம்:
மற்றுமையும் மண்டையிலும் நிவாரணம்:
கருந்துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால், காய்ச்சல், இருமல், இரைப்பை பிரச்சனை, தொண்டை வலி போன்றவற்றில் நிவாரணம் தரும்.
நுண்ணுயிர் எதிர்ப்பு (Antibacterial & Antiviral)
இது உடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றை அழிக்கும் சக்தி கொண்டது.
இரத்தத்தூய்மை:
கருந்துளசி இலைகள் உடலில் இருந்து விஷக்கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன. இது சரும பிரச்சனைகளை குறைக்கும்.
மனஅமைதி
இதன் மணம் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
தினமும் ஒரு சில இலைகளை மென்று தின்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சுவாசக் கோளாறுகள்:
கருந்துளசியின் கஷாயம் குடித்தால் ஆஸ்துமா, மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளில் நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்:
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது.
குளிர்பிடிப்பதை தடுக்க:
கருந்துளசி இலைகள் தேநீரில் சேர்த்துப் குடித்தால், காய்ச்சல், குளிர், இருமல் எளிதில் கட்டுப்படும்.
மூட்டுவலி:
அதன் நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி குறைக்கும் (Anti-inflammatory) தன்மை மூட்டுவலியை குறைக்க உதவும்
விரைப்பை செயல்பாடுகளை மேம்படுத்துதல்:
இதன் மூலமாக ஜீரண சக்தி மேம்பட்டு, வயிற்று உபாதைகள் குறையும்.
தெய்வீக மூலிகை, இடிதாங்கியாக செயல் படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்த்தனர்.
சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும். ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் உண்டாக்கப்பட்ட மூலிகை.
பெண்களுக்கு வயிற்றில் இறந்த குழந்தை வெளியேற கருந்துளசி கொண்டுவந்து ஆய்ந்து உரலில் போட்டு இடித்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து ஒரு குவளை சாறுடன் நான்கு தேக்கரண்டி அளவு எள் எண்ணெய் விட்டு கலக்கி உள்ளே கொடுத்துவிட்டால் கால் மணி நேரத்தில் இறந்த குழந்தை வெளியேறிவிடும்.
இந்தக் கருந்துளசியினால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம்.
மிளகுடன் 10 துளசி இலைகளை பறித்து மென்று விழுங்கினால் தொண்டையில் உள்ள சளி முற்றிலுமாக நீங்கிவிடும்.
காலையில் எழுந்தவுடன் பல்லைக் கொப்பளித்துவிட்டு 5 இலைகளை உட்கொண்டால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கி விடும்.
வாய் துர்நாற்றத்தைப் போக்க கருந்துளசி இலைகளை பறித்து வாயில் மென்றால் பற்களில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். வாயும் துளசி மணம் கமழும்.
ஒரு செடி வைத்து வளர்த்தால் அதன் விதைப்பட்டு பல செடிகள் அதன் அருகே வந்துவிடும்.
வறட்சியைத் தாங்கக்கூடியது. அதில் வேதிப்பொருட்கள் நிறைய இருக்கின்றது.
இரவில் செம்பு (அ) பஞ்ச உலோகப்பாத்திரத்தில் 10 துளசி இலைகளை நசுக்கிப் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் கலந்து விடவும். பின் காலையில் வெறும் வயிற்றில் பல்லைக் கொப்பளித்துவிட்டு அந்த தண்ணீரினைப் பருக வேண்டும்.
உடலில் உள்ள அனைத்து தாதுப்பிரச்னைகளும் தீர்ந்துவிடும். தேகம் மிளிரும். புற்றுநோய்கூட உடனே கரைந்து போய்விடும் கண்புரை ஏற்பட்டாலும் சரிசெய்துவிடும்.
கருந்துளசியானது சுற்றுப்புறச்சூழலுக்கு மிகுந்த நண்பனாக இருக்கின்றது.
ஓசோன் படலத்தில் உள்ள பாதிப்பை சரி செய்கின்றது.
தினமும் கருந்துளசியை தவறாமல் எடுத்து வந்தால் 48 நாட்களில் சளி மற்றும் கபநோய்களிடம் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம்.
கருந்துளசியை சளித்தொல்லைக்கு ஒரு சிறந்த மருந்துச் செடியாக குறிப்பிடலாம். ‘
ஆசிமம் டெனியபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த செடிகளின் இலைகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.
சிறிது கருந்துளசி இலைகளை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கருந்துளசியை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், சைனஸ் தொல்லைகளால் ஏற்பட்ட சளி நீங்கும்.
அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க 5 அல்லது 10 கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊற வைத்து, அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 5, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்....
Comments
Post a Comment