நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை


*வல்லாரை கீரையின் பயன்கள்*

நினைவாற்றலை பெருக்கும் வல்லாரை கீரை

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். 

அந்த வகையில், உடல் சோர்வினை அகற்றி மூளையின் நினைவாற்றலை அதிகரிக்க செய்யக்கூடியதும், தொழுநோய்களை குணப்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.‘


பிரம்மி’ என்றழைக்கப்படும் வல்லாரை கீரையில் தலை சிறந்த மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ஏ, சி மற்றும் தாது உப்புக்களும், இரத்தத்துக்கு தேவையான சத்துக்களும் அதிக அளவில் உள்ளது.

 இக்கீரை இதயத்துக்கு வலுசேர்க்கிறதாகவும், மனத்திற்கு மென்மை உணர்வையும் தரக்கூடியது. சிரங்கு, தோல் நோய், குஷ்டத்திலிருந்து பாதுகாக்கிறது. அன்றாடம் மூன்று வல்லாரைக்கீரையை உட்கொள்வதால், முதிர்வை தடுக்கிறது.


பல்வேறு சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரையை பயன்படுத்தி வயிற்று பிரச்னைகளுக்கான தேநீர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
    
      வல்லாரை கீரை, வெந்தயம், கற்கண்டு. பாத்திரத்தில் தண்ணீருடன், வல்லாரை கீரை, வெந்தயம், கற்கண்டு சேர்த்து கொதிக்கவிடவும். இந்த தேநீரை அதிகாலையில் குடித்து வர வயிறு தொடர்பான உபாதைகள், பெண்களுக்கான இடுப்பு வலி, சிறுநீர் தாரையில் ஏற்படுகின்ற வீக்கம், அரிப்பு போன்ற நோய்கள் குணப்படும். வெள்ளைப்படுதல் நோய்க்கு சிறந்த மருந்தாகிறது. 


குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம் தேவையான பொருட்கள்:
        வல்லாரை இலைச்சாறு-50 மி.லி, நாட்டு சர்க்கரை, பால். ஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து, பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவிடவும், பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை மாறி அற்புதமான நினைவாற்றலை தருகிறது.

 உள்ளுறுப்புகளை தூண்டி, பலம் தருகிறது. வல்லாரை சாற்றில் திப்பிலியை ஊறவைத்து அதனை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல், காய்ச்சல், தொண்டை கட்டு, இரைப்பு போன்ற நோய்கள் சரியாகிறது. உடலை இறுக செய்து வனப்பை அதிகரிக்கிறது.
யானைக்கால், பற்கள் மற்றும் நரை முடியை தவிர்க்கும் நல்ல 
மருந்தாக வல்லாரை கீரை உள்ளது. 

வயிற்று புண்களை ஆற்றக்கூடிய 
வல்லாரை கீரை துவையல்:        

 தேவையான பொருட்கள்

          வல்லாரை பசை, மிளகு- சீரகப்பொடி, நெய், உப்பு. வானலியில் நெய் விட்டு சூடாக்கவும், பின் அதற்கு சம அளவு கீரை பசை சேர்த்து நன்கு வதக்கவும், இதனுடன் சிறிது உப்பு, மிளகு- சீரக பொடி சேர்த்து கிளறவும். துவையல் பதத்துக்கு வந்ததும் அதனை இறக்கிவிடவும். 



இதனை துவையலாகவோ அல்லது சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் புண்ணிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். நுண்கிருமி, பூஞ்சைகளை நீக்க கூடிய தன்மை கொண்ட வல்லாரை, உடலின் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. 

வல்லாரையை நன்றாக நசுக்கி மேல்பற்றாக தோலில் போடும்போது, தோல் எரிச்சல், வெளிப்புற நோய்கள் போகும். குறை நோய் என்று கூறப்படும் தொழுநோய் புண்களுக்கு மேல் மருந்தாகவும், தொழுநோயாளிகளுக்கு உள்மருந்தாகவும் இருக்கிறது.

 இதனுடன் உப்பு , பொடி சேர்த்து வதக்கவும். இதனை துவையலாகவோ அல்லது சாதத்துடன் பிசைந்து தொடர்ந்து சாப்பிடும்போது வயிற்று புண் விரைவில் குணமடையும். வயிற்று வலி நீங்கும்.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்