மக்களவையில் புதிய மசோதா
பிஜேபி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு புதிய சட்ட சீர்திருத்தங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 கொண்டு வந்து இருக்கிற து அதை பற்றி விரிவாக காண்போம்.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025, பழைய சட்டங்களை மாற்றி, குடியேற்றத்தை நவீனப்படுத்துகிறது.
வெளிநாட்டினர் நுழைவு, தங்குதல், பதிவு கட்டாயம்;
தேசிய பாதுகாப்பு முக்கியம். ஹோட்டல், கல்வி நிறுவனங்கள் விவரம் தர வேண்டும். மீறினால் 5 ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம் வரை உள்ளது.
அமித் ஷா, சுற்றுலா, கல்விக்கு வரவேற்பதாகவும், ஆபத்து உள்ளவர்களை தடுப்பதாகவும் கூறினார். சில எதிர்ப்பு இருந்தாலும், பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.
2025 ஆம் ஆண்டு குடியேற்ற மற்றும் வெளிநாட்டினர் மசோதாவிற்கு எதிர்ப்பு லோக்சபாவில் அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் திறமை புழக்கத்தை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி கட்சிகளால் எழுப்பப்பட்டது.
மனிஷ் திவாரி அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், மேல்முறையீடு இல்லாதது இயற்கை நீதியை பாதிப்பதாகவும் வாதிட்டார்.
சவுகதா ராய் கல்வி மற்றும் மருத்துவ திறமை புழக்கத்தை தடுக்கும் என்று குறிப்பிட்டார்.
Comments
Post a Comment