Gayatu joins hands with Simbu
தமிழ் சினிமாவுல முன்ணணி நடிகராக வலம்வந்து கொண்டு இருப்பவர் நடிகர் STR என்ற சிலம்பரசன் . இவரைப் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் அவ்வப்போது வந்து செல்லும்.



ஆனால் இவர் மாநாடு திரைப்படத்திற்கு பின் சினிமாவில் ஆர்வமாக நடித்து வருகிறார். விரைவில் இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய உலக நாயகன் கமல் அவர்களுடன் இணைந்து நடித்துள்ள தக்லைப் திரைப்படம் வர உள்ளது.
இந்த நிலையில் இவர் அடுத்தடுத்து தனது திரைப்பட அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். இதில் அவருடைய STR49 திரைப்படத்தை அண்மையில் வெளி வந்து மிகப்பெரிய வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இந்த படத்தில் டிராகன் பட கதாநாயகியான கயாடு சிம்புவுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Comments
Post a Comment