கருணைக்கிழங்கின் நன்மைகள்

*பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருணைக்கிழங்கு*



கருணை கிழங்கானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இவை பெண்களுக்கு மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கைகால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது. 


கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. ரத்தத்தை சமன்படுத்துகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

கருணை கிழங்கில் புரதம், வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. ஈரலுக்கு பலம் கொடுக்கிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. 

மாரடைப்பு, கேன்சர்  வராமல் தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

 

கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். கருனைகிழங்கை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். 


மலச்சிக்கல்  பிரச்னை தீரும். குடல் புண், வயிற்று புண்களை ஆற்றும். கருணை கிழங்கை சாப்பிடுவதால் ஏற்படும் எரிச்சலை போக்குவதற்கு புளி அல்லது மோர் சேர்த்து

 

கருணை கிழங்கு நார்ச்சத்து உடையது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருணை கிழங்கு லேகியம் மூலநோய்க்கு மருந்தாகிறது.

 

கருணை கிழங்கை கொண்டு மாதவிலக்கு பிரச்னைக்கான மருந்து தாயாரிக்கலாம். வேகவைத்து மசித்த கருணைக்கிழங்கு பசை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.  இதனுடன் வெல்லம் சேர்த்து கலந்து மாதவிலக்கு முன்பு சாப்பிட்டுவர கைகால் வலி இடுப்பு வலி, வயிற்று வலி, தலைவலி போன்றவை வராமல் இருக்கும்.

 

கருணைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துவர பல்வேறு நன்மைகள் கிடைக்கும். பெண்கள் இதை உணவில் எடுத்துக்கொள்வதால், மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் பிரச்னைகளை போக்கும்
  
வலியுடன் கூடிய மாதவிலக்கு, அதிகப்படியான ரத்தபோக்கை தடுக்கிறது. உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலம்  கொடுக்கும்.

 

கருணைகிழங்கு மலசிக்கலை போக்கும் தன்மையுடையது. நாட்பட்ட காய்ச்சலுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருனைகிழங்கு விளங்குகிறது. ஜீரண மண்டல உறுப்புக்கள் சரியாக வேலை செய்ய வைக்க கருணை கிழங்கு உதவுகிறது.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்