கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் குறித்து கொடிசியா கோரிக்கை

கோவை கிழக்கு புறவழிச்சாலை திட்டம் குறித்து கொடிசியா கோரிக்கை

          கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புதிய புறவழிச்சாலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த புறவழிச்சாலை, நரசிம்மநாயக்கன்பாளையத்திலிருந்து தொடங்கி கோவில்பாளையம், வாகரயம் பாளையம், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, செலக் கரிச்சல், ஒத்தக்கால்மண்டபம், வழுக்குப்பாறை, நவக்கரை போன்ற பகுதிகளின் வழியாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் 81 கி.மீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை, 6 வழிகளுடன் அமையும். இந்த தேசிய நெடுஞ்சாலை தரத்திற்கேற்ப வடிவமைக்கப்பட்டு, விரைவாக பயணிக்க வசதியாக இருக்கும். 

          இத்தகைய சாலை அமைந்தால், கோவை நகரத்தின் உள்ளாட்சி பகுதிகளில் போக்குவரத்து  நெரிசல் குறைவதுடன், தொழில்துறை வளர்ச்சிக்கு உதவியாக அமையும்.

                கோவையின் தொழில்துறை சங்கமான கொடிசியா  இந்த திட்டத்தை ஆதரித்து, அதனை போர்க்கால அடிப்படையில் விரைந்து தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. ஏனென்றால் இப்பகுதியில் தொழில்கள் பெரிதளவில் இயங்கி வருகின்றன. 
     
         வாகன நெரிசலால் மூலப்பொருள் கொண்டு செல்ல, தயாரிப்புப் பொருட்கள் விநியோகம் போன்றவற்றில் இடையூறு ஏற்பட்டுவருகிறது. கோவையின் கிழக்கு பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் நேரடி போக்குவரத்து தொடர்பு ஏற்படும்.
தாமதமின்றி பொருட்களை கொண்டு செல்லவும் வசதி உருவாகும்.

வணிக வளர்ச்சிக்கு புதிய வாயில்கள் திறக்கப்படும். சுற்றுப்புற கிராமங்களுக்கு நகரத்துடன் இணைப்பு கிடைக்கும்.தற்போதைய நிலையில், இந்த திட்டம் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. நிலமனை சரிபார்ப்பு, சாலை திட்ட வரைபடம், சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன.

   இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 'கோவை மாஸ்டர் பிளான்-2041' தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் ரங்கசாமி, உதவி இணை செயலர் சுரேஷ் குமார் மற்றம் நிர்வாகிகள், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

                             அந்த மனுவில் "நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் கோவில்பாளையம், வாகரம் பாளையம், கருமத்தம்பட்டி மற்றும் காரணம்பேட்டை, செலக் கரிச்சல், ஒத்தக்கால்மண்டபம், வழுக்குப்பாறை, நவக்கரை வரை 81 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைத்து கோவை கிழக்கு புறவழிச்சாலை உருவாக்க அரசால் திட்டமிடப்பட்டது. அந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்.

மெட்ரோ ரெயில், சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் கொண்ட 6 வழி நெடுஞ்சாலையாக கிழக்கு புறவழிச்சாலை இருக்க வேண்டும். கிழக்கு புறவழிச்சாலை ரோடு கோவை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய நிலத்தில் இருபுறமும் 1,000 மீட்டர்கள் தொழில்துறை பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.

கோவையில் கோவை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (சி.யு.டி.ஏ.) அமைக்க வேண்டும். அனைத்து வறண்ட நிலங்கள், தொழில்துறை மற்றும் தொழிற்சாலை பூங்காக்களின் அணுகு சாலைகளை 40 அடி அகலம் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் குறுக்கு சாலைகள் ஏற்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் கூறியிருந்தனர்


அதன்படி 2041-ம் ஆண்டுவரையிலான மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கோவையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

கோவையில் வரப்போகும் மெட்ரோ ரெயில், சாலையோர நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் பாதைகள், பஸ்கள் மற்றும் லாரிகளுக்கான டெப்போக்கள் அவசியமாகிறது. 


1,531 சதுர கிலோ மீட்டர் கோவை மாநகராட்சி, 4 நகராட்சிகள், 21 டவுன் பஞ்சாயத்துகள், 66 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது கோவை மாநகரின் மக்கள் தொகை 31 லட்சமாக உள்ளது. 2041-ம் ஆண்டு மக்கள் தொகை 58 லட்சத்து 20 ஆயிரமாக உயரும் என்பதால் அதற்கு தகுந்தவாறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.


இதேபோல் கோவை மாநகரம் மற்றும் கோவை புறநர் வளர்ச்சிக்காக கரவளிமாதப்பூரில் சரக்குமுனையம் 218 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக மாஸ்டர் பிளான் குறித்து அதிகாரிகள் கூறினார்கள். 


சரக்கு ரெயில் போக்குவரத்தும் இதனுடன் இணைக்கப்படும் என்றும் கூறினார்கள். கோவை மற்றும் சேலம் இடையே 180 கி.மீ. தூரத்திற்கு விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்கவும் பரிந்துரை செய்யப்படுவதாகவும், கோவையை திருப்பூர், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகியவற்றுடன் இணைக்கும் புறநகர் ரெயில்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும்  கொடிசியாவால் பரிந்துரை  செய்யப்பட்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்

இந்திய பொருளாதாரம் – பிரதமர் பெருமிதம் மற்றும் முன்னேற்றம்

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

Tiruchendur: ₹19 Crore Sea Wall Project to Prevent Erosion Near Murugan Temple Intensified