தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது!
தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது!
மத்திய அரசு சமீபத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடுதல் மற்றும் தோண்டுதல் பணிகளை மேற்கொள்வதற்காக புதிய அனுமதிகளை வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளும் முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசின் அறிவிப்பின் படி, மொத்தம் 28 வட்டாரங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேடுதலுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டின் 4 வட்டாரங்கள் உட்பட உள்ளன. குறிப்பாக, கன்னியாகுமரி அருகே தென்முனை பகுதியில்,
சென்னைக்கு அருகிலுள்ள ஆழ்கடல் பகுதியில் இரண்டும் மிக முக்கியமான இடங்களாகக் கருதப்படுகின்றன. இந்த தேடுதலுக்கும் தோண்டுதலுக்கும் இந்தியாவின் பிரபலமான எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி (ONGC - Oil and Natural Gas Corporation) இற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் பணிகள் மூலம் இந்தியா, வெளிநாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்து, சொந்த வளங்களை அதிக அளவில் பயன்படுத்த முடியும். இதன் மூலம் நாட்டு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று மத்திய அரசு நம்புகிறது. புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். பன்முக பொருளாதார வளர்ச்சி கிடைக்கும். ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமும் பரவியுள்ளது. குறிப்பாக கடல் உயிரினங்கள் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், விழிப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் கடலுக்கடியில் உள்ள இயற்கை வளங்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி தேடி பயன்படுத்து வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக உள்ளது. வளர்ச்சி முக்கியம் என்றாலும், இயற்கையின் சமநிலையும் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
Comments
Post a Comment