2026 சட்டமன்ற தேர்தல்: மீண்டும் கூட்டணி வைத்த அதிமுக - பாஜக

2026 சட்டமன்ற தேர்தல்: மீண்டும் கூட்டணி வைத்த அதிமுக - பாஜக


2026ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல மாதங்களாக கூட்டணிக்கு யாரும் வராமல் அமைதியாக இருந்த அதிமுகவும், தமிழகத்தில் தனித்து அடையாளம் கால் ஊன்ற பாஜகவும், மீண்டும் கை கோர்த்துள்ளன. பல கேள்விகளுக்கு இடையே, இந்த கூட்டணியின் தாக்கம், பின்னணி, எதிர்பார்ப்பு ஆகியவை பற்றி விரிவாக பார்ப்போம்.

           2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் பாஜக தனிக்கட்சி என தனிதது  வளர முயற்சித்தது. அதிமுகவும், பாஜகவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணியை விலக்கிக் கொண்டது. ஆனால் 2025-இல் இருந்து ஏற்பட்ட புதிய அரசியல் சூழ்நிலைகள், இரு கட்சிகளையும் மீண்டும் இணைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

அதிமுகக்கு  இடைவெளிக் காலத்தில் தலைமை தளர்ச்சி, பல்வேறு பிரிவுகள், மற்றும் தளவாடமான கட்சி அமைப்பு என சவால்கள் இருந்தன. தேர்தலில் பாஜகவிடம் வாக்குகளை இழப்பது பயம் ஏற்படுத்தியது.

பாஜகவிற்கு தமிழகத்தில் தனித்து வெல்லும் நிலை இன்னும் உருவாகவில்லை. அதிமுகவின் வட்டார வாக்கு வங்கியை நிலைநாட்டவேண்டும் என்ற அவசரம் அதிகரித்தது.

இருவருக்கும் ஆதாயமாகத் தோன்றினாலும், இந்த கூட்டணி சில பிரச்சனைகளும் ஏற்படுத்தும் .
வாக்காளர்களிடம் குழப்பம் ஏற்படவும் வாய்ப்பாக உள்ளது .முன்பு இணைந்த கட்சிகள் மோதிய பின்னர் மீண்டும் ஒன்றாக வருவது, பொதுமக்களில் நம்பிக்கை குறைபாடை உருவாக்கலாம்.

இந்த  நிலையில் சமமாக இல்லாத இரு கட்சிகள் இணையும் போது, வேட்பாளர் தேர்வு, முக்கிய தொகுதிகள், பிரச்சார மேடைகள் ஆகியவை பற்றிய முரண்பாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
 
2026 தேர்தலில் முக்கியமான கேள்விகள் பொது மக்களிடையே எழுந்துள்ளது. திமுக-வின் ஆட்சிக்கு மாற்று உருவாகுமா? என இருந்த நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி எவ்வளவு வாக்குகளை பெறும் எனவும்,
மக்களின் உணர்வுப்பாடுகளை எந்தக் கட்சி வெற்றிகரமாக கையாண்டு அரசியலில் முன்னணிக்கு வரும், என்ற கருத்து பொதுமக்களிடம் நிலவுகிறது.

            தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய உணர்வுகள் வலுவாக உள்ள நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி மீண்டும் இணைந்தது சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. பல இளைஞர்கள், சமூகவலைதளங்களில் இந்த கூட்டணிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

         இந்த கூட்டணி வெற்றியடையுமா என்பது பல அம்சங்களைப் பொருத்தது – களத்தில் இடம் பெற்ற எதிரணிகள், வாக்காளர்களின் உணர்வு, மற்றும் தேர்தல் காலத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் ஆகியவை. ஆனாலும், இது தமிழக அரசியலில் மிக முக்கியமான கட்டமாக மாறியிருக்கிறது என்பது உறுதி.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாஜக-அதிமுக கூட்டணி 2026ல் தமிழகத்தின் அரசியல் சாசனத்தை மாற்றுமா?
கருத்துக்களை பகிருங்கள்!




Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்