தமிழ்நாடு காவல்துறைக்காக ரூ.143.16 கோடியில் 321 புதிய குடியிருப்புகள் – "எல்லார்க்கும் எல்லாம்" திட்டத்தின் கீழ் முக்கிய நடவடிக்கை
தமிழ்நாடு காவல்துறைக்காக ரூ.143.16 கோடியில் 321 புதிய குடியிருப்புகள் – "எல்லார்க்கும் எல்லாம்" திட்டத்தின் கீழ் முக்கிய நடவடிக்கை
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதிநிலை அறிக்கையில், காவல்துறையின் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் "எல்லார்க்கும் எல்லாம்" திட்டத்தின் கீழ், ரூ.143.16 கோடி மதிப்பீட்டில் 321 காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய குடியிருப்புகள் உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மற்றும் பேருநகர் காவல் துறைகளை சேர்ந்த காவலர்களுக்காக கட்டப்படும். இது காவலர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முயற்சியாக கருதப்படுகிறது.
புதிதாக கட்டப்படும் குடியிருப்புகள் விபரம்:
பயன்படுத்தும் அதிகாரிகள் விபரம்:
6 காவல் உதவி ஆணையர்கள்
8 காவல் ஆய்வாளர்கள்
22 காவல் சார்பு ஆய்வாளர்கள்
255 காவல் ஆளிநர்கள்
மொத்தம்: 321 குடியிருப்புகள்
திருச்சி
மாவட்டம்
துவாக்குடியில் 70
தருமபுரி
மாவட்டம்
கம்பைநல்லூரில் 32
பெருநகர
கரூர்
மாவட்டம்
வெள்ளணையில் 29
திருநெல்வேலி
மாவட்டம்
களக்காட்டில் 39
பயன்பாட்டிற்கு
என மொத்தம் 321
சென்னை
காவல்
இராயப்பேட்டையில் 6
பெருநகர
சென்னை
காவல்
கொண்டித்தோப்பில் 120
'இராமநாதபுரம்
மாவட்டம்
சாயல்குடியில் 25
குடியிருப்புகள் கட்டப்படும்.
காவலர்களுக்கு சீரான குடியிருப்பு வசதிகள் ஏற்படுவது அவர்களின் வேலை நேர அமைதி மற்றும் குடும்ப வாழ்க்கையை மேம்படுத்தும்.
காவல்துறையின் பாதுகாப்பு சேவைகள் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருக்கும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் காவலர்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு உறுதி செய்கிறது. இந்த திட்டம் காவல்துறையின் அடிப்படை வசதிகளையும், சேவையின் நிலைத்தன்மையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக விளங்குகிறது.
Comments
Post a Comment