டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாக பணம் வசூலிப்பு – அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பங்குபாடு?
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாக பணம் வசூலிப்பு – அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை பங்குபாடு?
டாஸ்மாக் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியனின் அதிர்ச்சி பேட்டி!
தமிழகத்தில் டாஸ்மாக் என்பது மதுவிற்பனைக்கு அரசாங்கம் ஏற்படுத்திய ஒட்டுமொத்த அமைப்பு. அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஓர் அமைப்பாகும் . இங்கு பணிபுரியும் ஊழியர்கள் இன்று 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்தின் போது இந்த விற்பனை அமைப்பில், பல ஆண்டுகளாகவே "கூடுதல் கட்டணம் வசூலிப்பு" தொடர்பாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டியில், "ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பது உண்மைதான். அதனை அதிகாரிகள் முதல் அமைச்சர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பம் வரை பங்குபிரித்து கொள்கிறார்கள்" என்று வெளியிட்ட குற்றச்சாட்டு அரசியலிலும் சமூக ஊடகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல டாஸ்மாக் கடைகளில் பாட்டிலின் MRP விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவது பொதுவான புகார். இந்த கூடுதல் தொகை யாரிடம் செல்கிறது? இது தனிப்பட்ட ஊழலா, அல்லது ஒரு அமைப்பாக இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது.
ஒவ்வொரு கடையிலும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது.
இது சாதாரண ஊழலல்ல, ஒரு பங்கு பிரிப்பு முறை உள்ளது. அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை, மேலும் முதல்வரின் குடும்பம் வரை, இதில் பங்காளிகள் இருக்கிறார்கள்.
பணியாளர்கள் பேச முடியாத சூழல், மிரட்டல்கள், பணி நீக்கம் எனத்தொடரும் சூழ்நிலை.
இந்த குற்றச்சாட்டுகள் வெளியாகியதும், சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக்கள் பரவத் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளன.
அரசு தரப்பில் இதற்கேற்ப பதிலளிக்கப்படுமா?
இது போல குற்றச்சாட்டுகள் முந்தைய அரசியல் காலங்களிலும் எழுந்துள்ளன. ஆனால் தற்போது ஒரு ஊழியரே நேரடியாக இவ்வாறு பேசியிருப்பது முக்கிய turning point ஆகும்.
ஒரு பாட்டிலுக்கே கூடுதலாக பணம் வசூலிக்கப்படுகிறது என்பது பொதுமக்கள் பலரும் அனுபவித்த உண்மை. ஆனால் அந்த பணம் யாருக்குச் செல்கிறது என்பது தான் பெரிய கேள்வி. தற்போது அந்த மறைமுகச் சிந்தனைகளை வெளிப்படையாக பேசியுள்ளார் டாஸ்மாக் பணியாளர் சங்க தலைவர்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா?, அதற்கான விசாரணை நடந்தால் என்ன வரும்? என்பதையே மக்கள் எதிர்பார்த்து பார்க்கின்றனர்.
-
Comments
Post a Comment