தமிழக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் அரசு பேருந்தில் பணியாற்ற விரும்புவோருக்காக மகிழ்ச்சியான செய்தி!
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC/SETC) தனது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு பணிக்கு ஒரு உறுதியான வாய்ப்பு தேடுகிறீர்களா? இதை தவறவிடாதீர்கள்!
பணியின் விவரம் விரிவாக கீழ் காணலாம்
பதவி பெயர்:
1. ஓட்டுநர் (Driver)
2. நடத்துநர் (Conductor)
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பேருந்து நிலையங்களில் பணியிடங்கள் உள்ளன. ஓட்டுநர் பதவிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட 8ஆம் வகுப்பு அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வித் தகுதி, மற்றும் வணிக வாகன ஓட்டும் உரிமம் மற்றும் முதன்மை பயிற்சி சான்றிதழ் (Badge) அவசியம்.
வயது வரம்பு பொது பிரிவுக்கானவர்களுக்கு 24–40 வயது வரை இருக்கலாம்
நடத்துநர் பதவிக்கு SSLC தேர்ச்சியும்
நடத்துநர் உரிமம் (Conductor License) அவசியம். வயது வரம்பு பொது பிரிவுக்கானவர்களுக்கு 21–40 வயது வரை இருக்கலாம்
விண்ணப்பிக்கும் முறை:
இணையதள முகவரி https://arasubus.tn.gov.in
என்ற இணையதளத்தில் “Driver/Conductor Recruitment” பகுதியைத் தேர்வு செய்து, உங்கள் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்களை (உரிமங்கள், கல்விச் சான்றுகள், புகைப்படம்) சமர்ப்பிக்கவும்.
தேர்வு முறை:
ஓட்டுநர்களுக்கு சாலை ஓட்டுநர் சோதனையும், நடத்துநர்களுக்கு நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மற்றும் உடல் ஆரோக்கிய சோதனையும் அவசியம்
விண்ணப்ப தொடங்கும் தேதி அறிவிப்புடன் துவங்கும்
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிய இணையதளத்திற்கு சென்று காணலாம்
எவ்வித இடைக்கால முகவர்கள் இல்லாமல் நேரடியாக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கவேண்டும். தவறான தகவல் அளித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
Comments
Post a Comment