கோவை மக்களுக்கு புதிய டிஜிட்டல் சேவை – நம்ம கோவை செயலி அறிமுகம்
கோவை மக்களுக்கு புதிய டிஜிட்டல் சேவை – ‘நம்ம கோவை’ செயலி அறிமுகம்!
கோவை மாநகராட்சியின் டிஜிட்டல் புரட்சிக்கு ஒரு புதிய படி!
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ‘நம்ம கோவை’ எனும் செயலியை கோவை மாநகராட்சி நிர்வாகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, அரசு சேவைகள் மற்றும் தகவல்களை சுலபமாக மற்றும் விரைவாகப் பெற உதவும் ஒரு அட்டகாசமான செயலியாக இருக்கிறது.
மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி அவர்களின் தலைமையில் வெளியிட்டுள்ள இச்செயலி நாளிதழ்களில் பெரிதும் பேசப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த செயலி, கோவை மாநகராட்சியின் அனைத்து முக்கிய தகவல்களையும் ஒரு இடத்தில் ஒருங்கிணைக்கிறது. ‘நம்ம கோவை’ செயலியை ப்ளே ஸ்டோரில் "Namma Kovai" எனத் தேடி, உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த பிறகு, உங்கள் மொபைல் எண் மற்றும் ரகசிய குறியீட்டை உள்ளீடு செய்து செயலியை பயன்படுத்தலாம்.
செயலியின் முக்கிய அம்சங்கள் கீழ் காணலாம்
கோவையின் முக்கிய சுற்றுலா தளங்கள் ,மாநகரத்தின் அடிப்படை சுய விவரங்கள் மற்றும்வார்டுகள் மற்றும் அதன் வரைபடங்கள், மாநகராட்சிப் பணிகள் மற்றும் அரசு திட்டங்கள் , நகராட்சி அலுவலர்களின் தொடர்பு விவரங்கள், அமல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள், அதிகாரிகளின் ஆய்வு நிகழ்வுகள், நிகழ்ச்சிகள்,மாநகராட்சி திருமண மண்டப விவரங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், காவல் நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விடுதிகள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் ஆன்லைன் சேவைகளான சொத்து வரி செலுத்தல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல்
கட்டிட அனுமதி எண்ணுக்கு விண்ணப்பித்தல், திருமண மண்டப முன்பதிவு, வரிவசூல் மையங்களை அறிதல் இது போன்ற பல சேவைகளை உள்ளடக்கி பொதுமக்கள் – நிர்வாகம் இடையேயான பாலமாக விளங்க உருவாக்க பட்டுள்ளது.
‘நம்ம கோவை’ செயலி, பொதுமக்கள் மற்றும் நகர நிர்வாகத்துக்கிடையில் ஒரு நேரடி இணைப்பு பாலமாக செயல்படுகிறது. மக்கள் தேவையான சேவைகளை எளிதாகக் கொண்டு வருவதோடு, நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையான தகவல்களையும் பெற முடிகிறது. இது கோவையை டிஜிட்டல் நகரமாக மாற்றும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
‘நம்ம கோவை’ செயலி என்பது ஒரு நகரின் சர்வதேச தரமான நிர்வாகத் திறனுக்கான ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. நமது நகரத்தின் சேவைகள், தகவல்கள், நலத் திட்டங்கள் அனைத்தையும் உங்கள் கைபேசியில் தரும் இச்செயலியை நீங்கள் இன்னும் பயன்படுத்தவில்லை என்றால், இப்போது உடனே பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்!
Comments
Post a Comment