பரந்தூர் மக்களுக்காகத் தொடர்ந்து உருக்கமான குரல் – “நாளை நமதே” எனும் நம்பிக்கையை ஊட்டும் தவெக தலைவர் விஜய்!
பரந்தூர் மக்களுக்காகத் தொடர்ந்து உருக்கமான குரல் – “நாளை நமதே” எனும் நம்பிக்கையை ஊட்டும் தவெக தலைவர் விஜய்!
மண்ணுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராடும் பரந்தூர் மக்களே – தவெக தலைவர் விஜயின் x ல் ஆதரவு தெரிவித்தார்
பரந்தூர் மக்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட பசுமைத் திருப்பத்தையும், விமான நிலைய திட்டத்தையும் எதிர்த்து, ஆயிரம் நாட்களுக்கு மேலாக மக்கள் தொடர்ந்து அமைப்பாக போராடி வருகின்றனர். அவர்களின் நிலம், வாழ்வாதாரம், மரபு – இவை அனைத்தையும் பாதுகாப்பதற்காகவே இந்த அறப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ் நாட்டின் மக்கள் நல இயக்கமான தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட உருக்கமான செய்தி, பரந்தூர் மக்களுக்கு மட்டுமல்லாமல், சமூக நீதி விரும்புகிற ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையின் தீபமாக நிற்கிறது.
"மண்ணுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் ஆயிரம் நாட்களை கடந்து அறப் போராட்டம் நடத்தி வரும் பாசத்திற்குரிய என் பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே" என அவர் பதிவிட்டுள்ளார்.
இச்சொற்கள் சாதாரண வார்த்தைகள் அல்ல. இது ஒரு உணர்வின் வெளிப்பாடு, ஒரு மக்களின் போராட்டத்திற்கு நிமிர்ந்த நெஞ்சுடன் வழங்கப்படும் ஆதரவாக பார்க்க படுகிறது. தவெக் கட்சி தொடங்கியதிலிருந்து, சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறது. பரந்தூர் விவகாரத்தில் விஜயின் பக்கம் எடுத்துக்கொள்ளும் உறுதியான நிலை, அவர் அரசியல் மேடையை மக்களுக்காக பயன்படுத்த விரும்புகிறார் என்பதை உறுதி செய்கிறது . மக்கள் உரிமைக்காக ஒரு குரல் – இது தொடக்கமே!
பரந்தூர் மக்களுக்கான இந்த ஆதரவு, தமிழக அரசியலில் புதிய மாற்றத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. மக்கள் விரும்பும் தளபதி, இப்போது தலைவர் விஜய் ஆக அரசியலிலும் மக்கள் நலப் பணிகளிலும் தீவிரமாக நடந்து வருகிறார். நாள் என்பது நேரத்தில் நிகழும் மாற்றமல்ல – நம்பிக்கையில் உருவாகும் புரட்சி. பரந்தூர் மக்களே, உங்களின் உறுதியான போராட்டத்திற்கு தமிழகமே துணை நிற்கும் நாளும் நெருங்கி வருகிறது!
Comments
Post a Comment