விராட் கோலியின் டி20 யில் 100வது அரை சதம் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை
விராட் கோலியின் டி20 யில் 100வது அரை சதம் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று பெரும் கொண்டாட்ட நாளாக அமைந்தது, காரணம், இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும், உலக கிரிக்கெட்டின் ரன் மிஷின் எனவும் பெயர் பெற்ற விராட் கோலி, தனது டி20 கேரியரில் 100வது அரை சதத்தை பெங்களுர் அணிக்காக பதிவு செய்து ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனைகளை கீழ் காண்போம்
மொத்தம் 100 அரை சதங்கள் – IPL, இந்திய அணிக்கான T20I மற்றும் பிற டி20 லீக் போட்டிகள் அனைத்தையும் சேர்த்து டி20 வடிவத்தில் எவரும் இதுவரை எட்டாத சாதனையாக அமைந்துள்ளது. ஒரு வீரர் தொடர்ந்து உயர்ந்த தரத்தில் ஆடுவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதற்காக அவரின் கடின உழைப்பு, விடாமுயற்சி, மிகச்சிறந்த தொழில்முறை அணுகுமுறை மற்றும் பற்று உள்ளவருக்கே சாத்தியம்.
கோலியின் கேரியரில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், டி20 வடிவம் என்பது அவருக்கான களமாக மாறியுள்ளது. முக்கிய போட்டிகளில் நடுவில் ஆடி அணியை காப்பாற்றிய பல ஆட்டங்கள் அவரது தொடர்ச்சியான பங்களிப்பை நிரூபிக்கின்றன. அவர் விளாசிய அரை சதங்கள் பலவாக இருந்தாலும், அவை வெறும் புள்ளிகளாக இல்லாமல், அணிக்கு வெற்றி தேடித்தந்த முக்கிய தருணங்களாகவும் இருக்கின்றன.
சமூக ஊடகங்கள் முழுவதும் கோலிக்கான பாராட்டுகள் குவிந்து வருகின்றன. "கிங் கொலி"ரன் மிசின்un ", "கோட்" போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின்றன. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இவரது தொடர்ச்சியான ஆட்டத்திறனை பார்த்து அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சாதனை ஒரு முடிவல்ல; அது ஒரு புதிய தொடக்கமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. விராட் கோலி இன்னும் பல ஆண்டுகள் இந்த மாறி வரும் டி20 கிரிக்கெட் உலகில் தனது முத்திரையை பதிக்கவுள்ளார். உலகக் கோப்பை, IPL போன்ற முக்கிய தொடர்களில் அவரிடம் இருந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உருவாக்கி உள்ளது.
Comments
Post a Comment