இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் விரைவில் மாற்றம் – BCCI கடும் முடிவுகள் எடுக்கப் போவது ஏன்?
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் விரைவில் மாற்றம் – BCCI கடும் முடிவுகள் எடுக்கப் போவது ஏன்?
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றம் வரவிருக்கிறது என செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. கடந்த ஓராண்டாக அணியின் தொடர்ச்சியான தோல்விகள், வீரர்களின் செயலிழப்பு, அணியின் மனோதன்மை போன்ற பல அம்சங்கள் மீது பலமாக கேள்விகள் எழுந்ததை அடுத்து, BCCI கடுமையான முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை வென்றிருந்தாலும், அதற்கு முந்தைய தோல்விகள் BCCI யை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. குறிப்பாக, பல ஆண்டுகள் கழித்து உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிராக தொடரில் இந்தியா 3-0 என ஒயிட் வாஷ் ஆகியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இந்திய அணி 1-3 என தொடரை இழந்து பேட்டிங் லைன்அப் மிக மோசமாக செயல்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் தானாகவே வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்த தோல்விகளின் வெளிப்பாடாக BCCI முக்கிய ஆலோசனைகளில் இறங்கியதாக தெரிகிறது. தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோஹித் ஆகியோருடன் இணைந்து பயிற்சியாளர் குழுவை மிக நுட்பமாக கண்காணிக்கத் தொடங்கினர். இதனடிப்படையில் தேசிய அணியில் இருக்கும் வீரர்கள் கட்டாயமாக உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். வீரர்கள் தங்களது குடும்பத்தினரை குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வெளிநாடு சுற்றுப்பயணங்களில் அழைத்துச் செல்ல அனுமதி என வீரர்கள் கட்டுப்படுத்த தொடங்கினர்
மேலும் அபிஷேக் நாயர் (பேட்டிங் பயிற்சியாளர்), திலீப் குமார் (பீல்டிங் பயிற்சியாளர்) , சோஹம் தேசாய் (உடற்தகுதி பயிற்சியாளர்) இவர்களை பிசிசிஐ பொறுப்பிலிருந்து விரைவில் நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிஷேக் நாயர் அணியில் சேர்ந்தது கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன் அவரை அணிக்குள் கொண்டுவந்தது கவுதம் கம்பீர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அவரை நீக்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
BCCI இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்றாலும், BCCI இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த மாற்றங்களுக்கு பின்னால் உள்ள காரணங்களும் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்ட படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் உயரும் நிலையில், பிசிசிஐ எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகுந்த விமர்சனத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. பயிற்சியாளர் குழுவின் மீதான இந்த மாற்றம் இந்திய அணியின் எதிர்காலத்தை எப்படி மாற்றப்போகிறது என்பதைக் காலமே தீர்மானிக்க வேண்டும்!
இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் மேலும் இவ்வாறான செய்திகளுக்கு தொடர்ந்து வாசிக்க: sathyask456.blogspot.com
Comments
Post a Comment