கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் – உலகம் முழுவதும் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் – உலகம் முழுவதும் இரங்கல்
உலகின் மிகப் பெரிய கிறிஸ்தவ அமைப்பான கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், இன்று (21 ஏப்ரல் 2025) காலமானார் என்பதைக் குறிப்பிடவே பெரும் வேதனையோடு இந்த செய்தியை பகிர்கிறோம். 88 வயதான இவர், கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
போப் பிரான்சிஸ், இயற்பெயர் ஜோர்ஜ் மாரியோ பெர்கொலியோ, அர்ஜென்டினாவில் 1936-ஆம் ஆண்டு பிறந்தவர். 2013-ஆம் ஆண்டு, தனது முன்னோடிகளான போப் பெனடிக்ட் பதவியில் இருந்து விலகிய பின்பு, புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போப்பாக தேர்வு செய்யப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்கரும், முதல் ஜெசூயிட் அமைப்பைச் சேர்ந்தவரும் ஆவார்.
போப்பாக இருந்த 12 வருடங்களில், பல்வேறு சமூக முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்களை அவர் எதிர்கொண்டு அதற்கு தீர்வு காண முயன்றார்.
ஏழைகள், அகதிகள், மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தனது வாழ்கையை வாழ்ந்தார்.
மேலும்சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அடிக்கடி உரையாற்றுதல், மத சகிப்புத்தன்மை, மற்றும் உலக அமைதி குறித்து வலியுறுத்துதல், அன்பும், தயையும் மனிதத்துவமும் நம்மை வழிநடத்த வேண்டும் என்பதே அவரது முக்கியக் கொள்கையாக இருந்தது.
போப்பின் மரணச் செய்தி உலகம் முழுவதும் வருத்தத்தைக் கிளப்பியுள்ளது. உலகின் பல தலைவர்கள், மதத் தலைவர்கள், மற்றும் கோடிக்கணக்கான பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வத்திகன் நகரில், மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி துயரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வத்திகன் நகரில் உள்ள சென் பீட்டர்ஸ் பசிலிக்கா என்ற பிரபல திருச்சபையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் அந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். போப் பிரான்சிஸ் என்ற தலைவனை இழந்தது உலக கத்தோலிக்க சமூகத்திற்கு பெரும் இழப்பாகும். அவரது பணிகள், வாக்கியங்கள், மற்றும் அன்பு அடையாளமாக எப்போதும் நினைவில் நிலைத்து நிற்கும்.
Comments
Post a Comment