சாலையில் இசை மழை? வாகன ஹார்னாக இனிமையான இந்திய இசை!
சாலையில் இசை மழை? வாகன ஹார்னாக இனிமையான இந்திய இசை!
இந்திய வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஹார்ன் சத்தங்கள் பெரும்பாலும் கடுமையானகேட்க சத்தமானதாகவே இருக்கின்றன. இது சாலை பாதுகாப்புக்கே பெரும் பிரச்சனையாக மட்டுமல்லாமல், பொதுமக்கள் மனநலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. இந்த சூழலை மாற்றும் நோக்கத்துடன், ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் அளித்த அறிக்கையில், புதிய வகை ஹார்ன்களை கொண்டு வர திட்டமிட்டிருப்பதை தெரிவித்தார்.
"வாகன ஹார்னாக இனிமையான இந்திய இசை!"பற்றி அவரது கூறியது,
"இனிமையான இந்திய இசை ஒலிகளை மட்டுமே வாகன ஹார்னாக பயன்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளேன். இதன்மூலம், புல்லாங்குழல், தபேலா, ஹார்மோனியம் போன்ற ஒலிகளை ஹார்னில் பயன்படுத்தலாம்."
இந்த உரையிலிருந்து தெரிகிறது, எதிர்காலத்தில் இந்திய சாலைகளில் புல்லாங்குழல் இசை அல்லது தபேலா ஒலி போன்ற இயற்கை இசை அலைகள் வீசப்போகின்றன என்ற நம்பிக்கையை.
ஏன் இந்த முயற்சி என்று கேள்வி எழுப்பிய போது, ஒலி மாசுபாட்டைக் குறைக்கவும் , மனநலத்திற்கு நன்மை பயக்கும் வகையிலும், பாரம்பரிய இசையை ஊக்குவிக்கவும், சாலையின் உள் அமைதியைக் காக்கவும் ,
அதற்கு இனிமையான சாத்தியமான ஒலிகளை புல்லாங்குழல் இசை,தபேலா தாளங்கள்
ஹார்மோனியம் இசை, வீணை அல்லது சித்தார் ஒலிகள் போன்ற கருவிகளின் ஒலிகள் பயணத்தை இனிமையாக உணர வைக்கும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ள படுகிறது என தெரிவித்தார்.
இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிலர் “இனி சாலை சத்தமாக இருக்காது, இசையாக இருக்கும்!” என கூறி வருகின்றனர். மற்றொருபுறம், “ஹார்ன் எச்சரிக்கைக்காக, இசை பரவசத்துக்கா?” என்ற கேள்வியும் எழுகின்றது.
இந்த முயற்சி அமலுக்கு வந்தால், இந்திய சாலைகளின் ஒலி சூழல் முற்றிலும் மாறக்கூடும். உண்மையில் இது ஒரு உலகின் முன்னோடியான முயற்சியாக இருக்கலாம். ஹார்ன்கள் இனி இரட்டும் சத்தமாக அல்ல, இசையின் இனிமையாக ஒலிக்கட்டும்!
Comments
Post a Comment