ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு, பலர் சிக்கியிருக்கலாம், அதிர்ச்சி தகவல்
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு, பலர் சிக்கியிருக்கலாம், அதிர்ச்சி தகவல்
அனகப்பள்ளி, ஆந்திரா:
ஆந்திரப் பிரதேசம் அனகப்பள்ளி மாவட்டம் கைலாசப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நேரத்தில், அந்த தொழிற்சாலையில் சுமார் 15 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட வெடி காரணமாக, முழு தொழிற்சாலையும் இடிந்து விழுந்தது. இதனால், சம்பவ இடம் முழுவதும் தீ பரவியதும், உள்ளே இருந்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.
உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில்...
அங்குள்ள உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புப் படையினரின் தகவலின்படி, இப்போது வரை 6 உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிலர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் உள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணியில் தீவிரமாக செயல்படுத்த படு வருகிறது. விபத்து நடந்த இடத்தில், மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணனின் உத்தரவின் பேரில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) நிபுணர்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. ஆனால் பட்டாசு தயாரிப்பு நிலைமைகள், பாதுகாப்பு வசதிகள் போன்றவை தற்போது விசாரணையின் கீழ் உள்ளன.
இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை, பட்டாசு தொழிலில் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களால் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Comments
Post a Comment