மாநாடு , தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் மாற்றம் – ஆளுநரை மிஞ்சும் முதலமைச்சரா?
முதல்வருக்கு எதிராக ஆளுநர் ரவி மாநாடு , தமிழ்நாட்டில் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் மாற்றம் – ஆளுநரை மிஞ்சும் முதலமைச்சரா?
தமிழ்நாட்டில் கல்வித்துறையில் ஒரு முக்கியமான மாற்றம் உருவாகியுள்ளது. இதுவரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) ஆளுநர் இருந்தது வழக்கம். ஆனால், இப்போது அந்த நிலைமையை மாற்றும் வகையில், மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்து, முதலமைச்சரே பல்கலைக்கழகங்களின் வேந்தராக பொறுப்பேற்கும் நிலையை உருவாக்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில பல்கலைக்கழகங்களிலும் வேந்தராக மாநில முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் மாநில அரசின் பங்கு பெரிதும் அதிகரிக்கப்படுகிறது. இதற்கு முன்பு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆளுநரே வேந்தராக இருந்ததால், துணைவேந்தர் நியமனங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் ஆளுநரின் பங்கு முக்கியமாக இருந்தது. இப்போது அந்த அதிகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு வருவதாக பார்க்கப்படுகிறது. தற்போது, பல மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உதாரணமாக, மதராசா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம்
போன்ற பல முக்கிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இப்போதைய மாற்றம் மூலம், இந்த நியமனங்கள் மாநில அரசின் அறிவுறுத்தலின் அடிப்படையில் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
இந்த மாற்றம் அரசியல் நோக்கோடு செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த சில மாதங்களாக ஆளுநர் – மாநில அரசு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இதற்கு பின்னணி என்று பலர் கருதுகின்றனர். “மாநில அரசு மீது நம்பிக்கை இல்லாமல், கல்வி துறையை ஆளுநர் சுயமாக நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்கிற வாதத்தை முன்வைத்து, மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த புதிய சட்ட மாற்றம் தமிழ்நாட்டின் கல்வித் துறையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும். இது மாணவர்களின் வளர்ச்சி, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கல்வித் தரத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வருங்காலத்தில்தான் தெரியும். ஆனால், முதன்முறையாக “வேந்தர்” என்ற பதவி ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிலையில் தான் திடீரென ஆளுநர் ரவி அவர்கள் பல்கலைக்கழக மாநாட்டிற்கு துணைவேந்தர்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளார். இது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment