திடீர் U-Turn: சீனாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு பற்றி ட்ரம்ப் அறிவிப்பு!
திடீர் U-Turn: சீனாவுக்கான இறக்குமதி வரி குறைப்பு பற்றி ட்ரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வரி போர் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு முன், சீன பொருட்களுக்கு 145% வரி விதிக்கப்பட்டிருந்தது. பதிலுக்கு சீனாவும் 125% வரி விதித்து, வர்த்தக உறவுகள் பதற்றமடைந்தன. மேலும் இந்த வரி 245% ஆக உயர்த்தப்படும் என்ற பரிந்துரையும் எழுந்தது. ஆனால் தற்போதைய அறிவிப்பின் படி, இந்த வரி விகிதம் குறைக்கப்படும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.
“145% வரி என்பது மிக அதிகம். இது நிலைத்து நீடிக்காது. வரி குறைவது உறுதி. ஆனால், பூஜ்ஜியமாக இருக்காது. ஒரு காலத்தில் சீனாவுக்கு எந்த வரியும் கிடையாது. அதன் விளைவாக நாங்கள் தான் பாதிக்கப்பட்டோம். இனி, இருதரப்பும் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.
நிதிச் செயலாளரின் பார்வை: அமெரிக்க நிதிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், “தற்போதைய வரி அமைப்பு நீடிக்க முடியாது. இது முதலீட்டாளர்களுக்கும் சந்தை நிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார்.
இந்த அறிவிப்பு, வர்த்தக சந்தைகளில் நம்பிக்கையை உருவாக்கும் நிலையில் உள்ளது. எனினும், அமெரிக்காவின் இந்த திடீர் முடிவுக்கு சீனாவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.
சீனாவுக்கு அமெரிக்கா விதித்த 145% வரி குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. வர்த்தக போர் காரணமாக இரண்டு நாடுகளும் அதிக வரிகளை விதித்தன. இது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை ஊட்டும் வகையில் புதிய மாற்றமாக பார்க்க படுகிறது.
Comments
Post a Comment