10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா – புதிய டெக் புரட்சி


 10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா – புதிய டெக் புரட்சி


                 டெக்னாலஜி உலகில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கும் வகையில், சீனா தற்போது 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹவாய்  தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சீன யுனிகாம் தலையிட்டு  நிறுவனத்தின் கூட்டணி மூலம் இந்த சேவை தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் சீனா, இணைய வேகத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது.

          இந்த 10G சேவையின் மூலம், பதிவேற்றம் (Upload Speed) வேகம் 1008 Mbps என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான கோப்புகளை வெறும் நொடிகளில் பதிவேற்ற முடியும். வீடியோ ஸ்ட்ரீமிங், டெட்டா ட்ரான்ஸ்ஃபர், கிளவுட் சேவைகள் போன்றவை சீரான மற்றும் தாமதமின்றி நடைபெற முடியும். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது 5G சேவையே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. 5G என்றே இன்னும் ஆரம்ப நிலையில் தான் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சீனா 10G இணைய சேவையை அறிமுகப்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

          இது எதிர்கால இணைய சேவைகளுக்கு ஒரு புதிய வழிகாட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10G என்பது  வேகத்திற்கான மேம்பாடு மட்டுமல்ல, இது தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஒரு அடித்தளம். ஸ்மார்ட் நகரங்கள், ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் (AI), விரைவான கணினி கணக்கீடு (High Performance Computing) ஆகியவை இதன் மூலம் துரிதமாக வளரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

         சீனாவின் இந்த அறிவிப்பு, உலக அளவில் டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற நாடுகளும் இதனை அடைவதற்கான திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அப்டேட்களுக்கு தொடர்ந்து வாசிக்கவும்!

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்