இந்தியா–பாகிஸ்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம்: மாற்றம் தேவைப்பட்ட காலத்திலே முடிவுக்கு வந்த ஒரு ஒப்பந்தம்!


இந்தியா–பாகிஸ்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தம்: மாற்றம் தேவைப்பட்ட காலத்திலே முடிவுக்கு வந்த ஒரு ஒப்பந்தம்!


          இந்தியா–பாகிஸ்தான் இடையே கடந்த 1960ஆம் ஆண்டில் கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty), தற்போது பெரும் மாற்றத்துக்குள்ளாகியுள்ளது. இந்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜி அவர்களால் பாகிஸ்தானின் நீர்வளத்துறைச் செயலாளரான சயத் அலி முர்தாசா அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தில், இந்த ஒப்பந்தம் தற்போது "நிறுத்தி வைக்கப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.


            1960ஆம் ஆண்டு, உலக வங்கி உதவியுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிந்து நதிநீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்புடையது. இதில் மேற்கிந்திய நதிகள் (பியாஸ், ரவி, சத்லெஜ்) இந்தியாவுக்கு, கிழக்கிந்திய நதிகள் (இந்தஸ், ஜெலமு, செனாப்) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.


          இந்திய அரசு வெளியிட்டுள்ள கடிதத்தின் விவரப்படி, இந்த ஒப்பந்தம் செயல்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே பல அடிப்படை சூழ்நிலைகள் மாற்றமடைந்துள்ளன. முக்கியமாக:
மக்கள்தொகை மற்றும் தேவை அதிகரித்துள்ளது. சுத்தமான எரிசக்தி  வளர்ச்சி தேவைகள் அதிகரித்துள்ளன
தீவிரவாதச் செயல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள்
குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடைபெறும் பாகிஸ்தானின் ஆதரவுள்ள கிராமத்தீவிரவாதங்கள் பாகிஸ்தான், இந்தியாவுடன் உரையாட ஒத்துழைக்காமல் ஒப்பந்த மீறல்களில் ஈடுபடுகிறது



       இந்த நிலைமை இந்தியா, Treaty-யின் கீழ் தனது முழுமையான உரிமைகளைப் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. இதனையே முன்வைத்து, இந்திய அரசு, Treaty-யின் Article XII (3) இன் கீழ் Treaty-யை மறுஆய்வு செய்யும் நோக்கில், Treaty-யை உடனடியாக 'abeyance'-க்கு (நிறுத்தி வைக்க) கொண்டுவந்துள்ளது.

இது வரலாற்றில் எளிதில் குறிக்கப்பட்டு விடக்கூடிய முடிவு அல்ல:

             இந்த அறிவிப்பு, இருநாட்டு உறவுகள் மற்றும் பரந்தஅளவிலான நீர்வள கையாளும் சூழ்நிலையை மாற்றக்கூடியது. நீரின் உரிமைகள், அரசியல் பாதிப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


            சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் நிறைவேற்றம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த ஒரு முக்கிய தூணாக இருந்தது. ஆனால் இப்போது, இந்தியா தனது பாதுகாப்பு, வளவளர்ச்சி மற்றும் உரிமை தேவைகளை முன்னிறுத்தி, அதை நிறுத்தியிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதன் தாக்கங்கள் எதிர்காலத்தில் எப்படி உருவாகப்போகின்றன என்பதை கவனிக்க வேண்டிய நேரம் இது!


Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்