மாற்றுத்திறனாளிகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம் – உள்ளாட்சியில் நேரடி நியமன வாய்ப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம் – உள்ளாட்சியில் நேரடி நியமன வாய்ப்பு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் முழுமையான பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் ஒரு முக்கியமான மாற்றம் இன்று சட்டப்பேரவையில் அறிமுகமாகியுள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், நேரடி நியமனத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட வழிவகுக்கும் திருத்த சட்டமுன்வடிவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:
1.உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படுகிறது.
2.தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல், நியமன முறையில் பதவி வழங்கப்படும்.
3.இது இந்தியாவில் மிக முக்கியமான சமூக நீதிப் பயணமாகவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை உயர் மட்டத்தில் அங்கீகரிக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
4.உள்ளாட்சி அமைப்புகளில் இவர்களின் குரல் — சமூக முன்னேற்றத்திற்கான எண்ணங்களையும், அனுபவங்களையும் கொண்டு வரும்.
மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையாற்றியபோது, “மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தின் ஒரு ஓரத்தில் நிலைத்து விடக்கூடாது. அவர்கள் ஒரு சமூக மாற்றத்தின் தூணாக அமைய வேண்டும். அதற்கான வாயிலாகவே இந்த திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் பெருமளவான வரவேற்பு கிடைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிந்திக்கப்படும் அரசியல் நடவடிக்கைக்கு இது ஒரு வலுவான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
> “இனி உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குரல், மாற்றத்திற்கான குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்!”
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மக்கள் பிரதிநிதிகளாக வகைசெய்யும் வரலாற்று சிறப்புமிக்க திருத்த சட்டமுன்வடிவை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இனி உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குரல், மாற்றத்திற்கான குரலாக ஓங்கி ஒலிக்கட்டும் என துணை முதல்வராக திரு . உதயநிதி அவர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் இன்று நம் சமூகத்தில் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால், அரசியல் மற்றும் நிர்வாகத் தளங்களில் அவர்களின் பங்கேற்பு மிக குறைவாகவே உள்ளது. இந்த சட்ட திருத்தம், அந்த குறையை நிறைவேற்றும் புதிய பாதையை உருவாக்கும்
Comments
Post a Comment