அமெரிக்காவிடம் மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு 85,000 விசாக்களை வழங்கிய சீனா
அமெரிக்காவிடம் மோதல் எதிரொலி: இந்தியர்களுக்கு 85,000 விசாக்களை வழங்கிய சீனா
புதிய சர்வதேச அரசியலில் திடீர் ஏற்பட்டுள்ளது.திருப்பம் தொழில்நுட்ப
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போர், உலக நாடுகளின் அரசியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் H-1B விசா கொடுப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் ஏற்பட்டிருப்பது, இந்திய இளைஞர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இதை ஒரு வாய்ப்பாகக் கண்டு, சீனா தற்போது 85,000 விசாக்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலைவாய்ப்பு தேடி தவிக்கின்ற சூழ்நிலை உருவானது. AI, மெஷின் லெர்னிங், சைபர் பாதுகாப்பு, ரோபோடிக்ஸ் போன்ற துறைகளில் இந்தியர்களின் திறமையை சீனா கவனித்தது. இது அமெரிக்கா மீது அரசியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியாக பார்க்க படுகிறது.
இதனால் இந்தியர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது அதை கீழ் காண்போம்.
1. உயர் சம்பள வேலைவாய்ப்பு: சீனாவின் பெரும்பாலான நகரங்களில் MNC-களும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
2. விசா பிராசஸ்சிங் இலகுவாக்கம்: சீனா தற்போது வேர்க்க் விசா, ரிசெர்ச் விசா, தொழில்நுட்ப விசா என பல வகை விசாக்களில் விரைவான செயலாக்கத்தைக் கொண்டு வருகிறது.
3. சர்வதேச அனுபவம்: சீன நிறுவனங்களில் பணிபுரிவதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப பார்வை கிடைக்கும்.
சில சர்வதேச ஆய்வாளர்கள் கூற்றுப்படி, இது ஒரு "Tech Talent War" எனப்படும் நிலையை உருவாக்கும் முயற்சியாக கூறுகிறார்கள்.
இதன்மூலம் அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படலாம்.
இந்தியா-சீனா உறவுகளிலும் புதிய பரிமாணம் உருவாகலாம் என சீனா கருதுகிறது.
சீனாவில் பணிபுரிய முன்வரும் இந்தியர்கள், தங்களது தகவல் பாதுகாப்பு, வேலை சாசனங்கள் மற்றும் உரிமைகள் குறித்து முன்னதாகவே முழுமையான தகவல்களை பெற வேண்டியது அவசியம். கலாசார வேறுபாடுகள், மொழி தடைகள் போன்றவையும் ஒரு சவாலாக இருக்கும்.
இந்த 85,000 விசா அறிவிப்பு, சாதாரண விசா அறிவிப்பல்ல. இது ஒரு சர்வதேச அரசியல் மற்றும் தொழில்நுட்ப பிளான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பை நுண்ணறிவுடன் அணுக வேண்டும். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற ஆவலை மட்டும் வைத்து தீர்மானம் எடுக்காமல், அதன் பக்கவிளைவுகளையும் ஆராய்ந்து பார்த்தல் தான் நல்லது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment