தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு புதிய விதிமுறைகள்: முழு விவரம்
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் விளம்பர பலகைகள் அமைப்பதற்கு புதிய விதிமுறைகள்: முழு விவரம்
தமிழ்நாட்டில் ஊராட்சி பகுதிகளில் (கிராமங்களில்) விளம்பர பலகைகள் மற்றும் மின்னணு திரைகள் அமைப்பதை கட்டுப்படுத்த புதிய மசோதா சட்டப்பிரிவு அறிமுகமாகியுள்ளது. இந்த மசோதாவை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சமீபத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:
கிராமப்புற பகுதிகளில் விளம்பர பலகை அல்லது மின்னணு திரை அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகத்திலிருந்து கட்டாயமாக அனுமதி பெறவேண்டும். அனுமதியின்றி எந்தவிதமான விளம்பரமும் வைக்கக் கூடாது
அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைப்போர் மீது ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
சிறை தண்டனையுடன் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்படும்.
விளம்பர பலகைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.15,000 என்ற கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மூன்று ஆண்டுகள் வரை உரிமம் பெற இயலும். உரிமம் பெற்ற பிறகே விளம்பரங்களை நிறுவ அனுமதி வழங்கப்படும். கிராமப்புறங்களில் அழகியல் முறையை பாதுகாக்கவும்,
சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும்,
சீரற்ற விளம்பரங்களை கட்டுப்படுத்தவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
அனுமதியின்றி வைக்கப்படும் பலகையால் சுற்றுசூழல் பாதிக்கிறது.
சாலை பயணிகளுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. பொதுமக்களின் காணொளி பார்வையைத் தடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
இவற்றைத் தவிர்க்கும் நோக்கத்துடன், அரசு இப்போது விளம்பரங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இது தனிப்பட்ட நபர்கள், தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என எவரேனும் கிராமப்புறங்களில் விளம்பர பலகை அமைக்க முனைந்தால், இந்த சட்டத்தின் கீழ் முறையான அனுமதி மற்றும் கட்டணம் கட்டுதல் கட்டாயம்.
கட்டணம் செலுத்திய பிறகும், உரிய இடத்திற்கே பலகை அமைக்க வேண்டும். சட்டப்படி ஒப்புதல் பெற்ற வடிவமைப்பு மற்றும் அளவுகளில் விளம்பரம் இருக்க வேண்டும்.
தமக்கான உரிம காலம் முடிவடையும் முன் புதுப்பிக்க வேண்டும்.
இந்த புதிய மசோதா தமிழ்நாட்டின் ஊராட்சி பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட விளம்பர பரப்பும் கலாச்சாரத்தை உருவாக்கும் முக்கிய முயற்சி ஆகும். இது மூலம் கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், மக்கள் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதனைத் தெரிந்து கொண்டு, விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments
Post a Comment