கையில் செம்பு காப்பு அணிவதால் ஏற்படும் அற்புத மாற்றங்கள்
கையில் செம்பு காப்பு அணிவதால் ஏற்படும் அற்புத மாற்றங்கள்
செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது வாழ்வியல் நடைமுறையில் இருந்து வரும் ஒரு பழக்கம். நமது முன்னோர்கள் இதை உடல்நலனுக்குப் பெரிதும் உதவும் ஒன்றாகக் கருதியுள்ளனர்.
ஆர்திரிடிஸ் (மூட்டுவலி) நிவாரணம்
ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவதால் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவு அதிகரிக்கிறது. இது எலும்பு தேய்மானத்தை சரி செய்ய உதவுகிறது. இதன் மூலம்:
மூட்டுவலி குறையும் ,வீக்கம் கட்டுப்படும்,வலி தணியும்
பாக்டீரியா எதிர்ப்பு தன்மை
முன்னோர்கள் காலத்தில் காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. தாமிரம் ஆன்டி பாக்டீரியா தன்மை கொண்டதால், உடலில் உள்ள 99% பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்திற்குள் அழிக்கும் சக்தி கொண்டது.
செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த பாரம்பரிய வழக்கமாகும். குறிப்பாக மூட்டுவலி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது பெரிதும் உதவும்.
Comments
Post a Comment