அதிமுக–பாஜக கூட்டணியையும், திமுக–பாஜக மறைமுக டீலிஙையும் குறிவைத்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தவெக தலைவர் விஜயின் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த விமர்சனம்

 தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் தனது சமீபத்திய சுற்றுப்பயணத்தின் போது அதிமுக–பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். விஜய், தனது உரையில்,

 “மூச்சுக்கு முன்னொரு தடவை அம்மா... அம்மா... அம்மா... என்று சொல்லிக்கொண்டிருந்த அதிமுக தலைவர்கள், ஜெயலலிதா மேடம் கூறிய கொள்கைகளை முற்றிலும் மறந்து, இப்போது பாஜகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இணைந்துள்ளனர். கேட்டால், ‘தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்’ என்று கூறுகிறார்கள்” என்று எள்ளி நகைச்சுவையுடன் விமர்சித்தார்.

 பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி விஜய் 
      மேலும், “இந்த பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? நீட் தேர்வை ஒழிக்கவில்லை கல்விக்குத் தேவையான நிதியை வழங்கவில்லை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவில்லை அப்படியிருக்க, எந்த நியாயத்துக்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி?” என்று கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் தொண்டர்களின் சந்தேகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் உண்மையான தொண்டர்கள் கூட, “இந்த கூட்டணி மக்களுக்காக அல்ல, சுயநலத்திற்காக மட்டுமே” என்று கேள்வி எழுப்புகிறார்கள் என்பதை விஜய் வலியுறுத்தினார். 

 அதிமுக-பாஜக உறவு குறித்து விமர்சனம் விஜய், 

“அதிமுகவும் பாஜகவும் நேரடி உறவுக்காரர்கள் என்பதை எல்லோரும் அறிந்ததே. இந்த கூட்டணிக்கு மக்களிடம் எந்த நம்பிக்கையும் இல்லை. அதே நேரத்தில், திமுகவும் பாஜகவுடன் மறைமுக அண்டர்கவுண் டீலிங் வைத்து ‘மறைவுக்கார உறவுக்காரர்கள்’ போல செயல்படுகிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்” என்று கூறினார். 

 தேர்தலில் எச்சரிக்கை வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, விஜய் மக்களை எச்சரித்தார்: “நீங்கள் திமுகவுக்கு ஓட்டளித்தீர்கள் என்றால், அது பாஜகவுக்கே சென்றுவிடும். வெளியில் சண்டையிட்டது போல காட்டி, உள்ளுக்குள் கூட்டு அரசியலை நடத்துகிறார்கள். ஆகவே மக்களே, ஜாக்கிரதையாக யோசித்துப் பாருங்கள்” என்று உரை நிறைவு செய்தார்.  

 விஜயின் உரை, அதிமுக–பாஜக கூட்டணியையும், திமுக–பாஜக மறைமுக தொடர்புகளையும் குறிவைத்து அரசியல் விமர்சனமாக அமைந்துள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

Popular posts from this blog

சிவகங்கையில் 144 தடை – மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

குஜராத்தில் புதிய அமைச்சரவையில் ரிவாபா ஜடேஜா இடம் பெற்றது – 25 பேர் மொத்தம்

Bad Girl movie OTT வெளியீடு: நவம்பர் 4 முதல் பல மொழிகளில்

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் லக்கேஜ் லாக்கர் வசதி

RR vs SRH match தற்போதைய நிலவரம்

சூரசம்ஹாரத்திற்காக தயாராகும் திருச்செந்தூர்!

சீனாவின் சாங்காயில் புதிய தங்க ATM – 30 நிமிடங்களில் தங்கத்தை உருக்கி பணம் செலுத்தும் அதிசயம்!

திருமலையில் புதிய PAC–5 (வெங்கடாத்ரி நிலயம்) யாத்திரிகர் வசதி மையம் திறப்பு – ஒரே நேரத்தில் 2,500 பக்தர்களுக்கான நவீன தங்குமிடம்

தனுஷ் கோவைக்கு வருகிறார்: இட்லிகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் உற்சாகம்