“கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்!” – கரூர் துயர சம்பவத்துக்கு ஆறுதல் கூறிய தவெக தலைவர் விஜய்!
கரூர் துயர சம்பவத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த விஜய்!
கரூரில் சில நாட்களுக்கு முன்பு நடந்த தாங்க முடியாத துயரமான நிகழ்வால் பல குடும்பங்கள் தங்கள் அன்பினரை இழந்து துயரத்தில் வாடி வருகின்றனர். அந்த நிகழ்வை தொடர்ந்து பலரும் தங்களின் ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்து உணர்ச்சி மிகுந்த கடிதம் எழுதியுள்ளார்.
“கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்” – விஜயின் கடிதம்
அவரது கடிதத்தில்,
“கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறேன்; இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்பேன் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்” என எழுதியுள்ளார். மேலும்,
“ஏற்கனவே அறிவித்தபடி, குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அனுப்பி வைத்துள்ளேன்; அதை உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும்,
“இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்துவருவோம்
என கடிதத்தை முடித்துள்ளார்.
தவெகத்தின் மனிதநேயம் வெளிப்பாடு
விஜயின் இந்த நிதியுதவி, சாதாரண அரசியல் செயல் அல்ல; மனிதநேயம் கலந்த செயல் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்த நிதி ஒரு தாங்குதலாக இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு
தவெக தலைவர் விஜயின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “தலைவர் மனசே பெரியது”, “இப்படித்தான் உண்மையான தலைமை” என்ற வகையில் ரசிகர்கள் பெருமையாக பகிர்ந்து வருகின்றனர்.
கரூர் சம்பவம் தமிழ்நாட்டை முழுமையாக அதிர்ச்சியடையச் செய்திருந்த நிலையில், விஜயின் இந்த நிதியுதவி மற்றும் ஆறுதல் கடிதம் பலரின் மனதில் நம்பிக்கையை ஊட்டியுள்ளது. துயரத்தைக் கடந்து வாழ்வை முன்னேற்றும் குடும்பங்களுக்கு இது ஒரு உண்மையான ஆதரவாக அமைந்துள்ளது.
Comments
Post a Comment