தேமுதிக கட்சி மாவட்ட மாநாடு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் – தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு
தேமுதிக கட்சி மாவட்ட மாநாடு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் – தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு தமிழக அரசியல் வரலாற்றில் தனிப்பட்ட பாதையைப் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), அதன் மாவட்ட மாநாட்டை 2025 ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் சிறப்பாக நடத்த உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கட்சியின் முக்கிய தலைவர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துக்கொள்ளும் இந்த மாநாடு, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தயார் கூட்டமாகவும் கருதப்படுகிறது. மாநாட்டின் முக்கிய அம்சமாக, கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்தின் கொள்கைகளை மீண்டும் மக்கள் மத்தியில் வலியுறுத்தும் விதமாக, முக்கிய அரசியல் முடிவுகளும் அறிவிக்கப்படலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கேப்டன் சிலை: மாநாட்டின் போது மேலும் ஒரு முக்கிய முடிவாக, “ஒவ்வொரு மாவட்டத்திலும் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் சிலையை திறக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதையும்,” திருமதி பிரேமலதா தெரிவித்துள்ளார். இது...